இங்கிலாந்து நாட்டின் நட்சத்திர சைக்கிள் வீரராக வலம் வந்தவர் ஸ்டீவ் கம்மிங்ஸ். இவர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் குழு சைக்கிள் பந்தையத்தில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பத்தகத்தை வென்றவர்.
மேலும் இவர் 2006ஆம் ஆண்டு மெல்பொர்னில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக தங்கம் வென்று அசத்தினார்.
இந்நிலையில் கம்மிங்ஸ், நேற்று முந்தினம் அனைத்து விதமான சைக்கிள் பந்தையங்களிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். 38 வயதாகிய கம்மிங்ஸ் தனது வயது மூப்பின் காரணமாக சைக்கிள் போட்டிகளிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் அனைத்து நேரங்களிலும் என்னுடைய திறமையை இந்த உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளேன். ஆனால் தற்போது எனது உடல்நிலை காரணமாகவும், வயது காரணமாகவும் இதிலிருந்து ஓய்வெடுக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நோபால்களை கோட்டைவிட்ட அம்பயர்களால் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் டெஸ்ட்டில் சர்ச்சை