தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் தொடக்கம் - school level

பெரம்பலூர்: மாநில அளவிலான ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளுக்கான டேக்வாண்டோ போட்டிகள் தொடங்கின. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

takvondo

By

Published : Aug 10, 2019, 3:16 PM IST

பெரம்பலூர் டாக்டர் எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் பெரம்பலூர் மாவட்ட டேக்வாண்டோ அசோஷியேசன் சார்பில் 32ஆவது மாநில அளவிலான ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளுக்கான டேக்வாண்டோ போட்டிகள் தொடங்கின. இந்த போட்டிகளை பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகள்

இந்த போட்டிகள் 15, 16, 17 ஆகிய வயது உடையவர்கள் ஜூனியர் பிரிவுகளிலும், 18, 19, 20 வயது உடையவர்கள் சீனியர் பிரிவுகளிலும் கலந்து கொள்வார். பெரம்பலூர், அரியலூர், கரூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும், ஜூனியர் பிரிவில் 20 பேரும், சீனியர் பிரிவில் 18 பெரும் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வர் எனவும், இங்கு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்படும் என விழாக் குழுவினர் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details