அரியலூரில் மாவட்டத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான கராத்தே மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது. கராத்தே போட்டியில் 8,10,12,14,16 என்ற வயதின் அடிப்படையில் ஐந்து பிரிவாக மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.
அதேபோல் ஸ்கேட்டிங் போட்டியிலும் 8,10,12,14,16 என்ற வயது அடிப்படையில் ஐந்து பிரிவாக இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.