திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு அரங்கில் மூன்றாவது மாநில அளவிலான இளையோர் தடகளப் போட்டிகள் கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி முதல் மார்ச் ஒன்றாம் தேதிவரை நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, பெரம்பலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இளையோர் தடகளப் போட்டி: தங்கம் வென்ற பெரம்பலூர் மாணவிகள்! - விளையாட்டு விடுதி மாணவிகள் சாதனை
பெரம்பலூர்: இளையோருக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் மூன்று பேர் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
State Level Sports Meet Winners Form Perambalur
இந்தப் போட்டியில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் பிரியதர்ஷினி - ஈட்டி எறிதலில் தங்கமும், கார் குழலி - சங்கிலி குண்டு எறிதலில் தங்கமும், சுபாஷினி - 5 கி.மீ நடை போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர், தடகளப் பயிற்றுநர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சிலம்பத்தில் அசத்தி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 5 வயது மாணவி