திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு முன்னாள் படை வீரர் கழகத்தின் எட்டாம் ஆண்டுகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அதனை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கிவைத்தார்.
செஸ், கேரம், பேட்மிட்டன், வாலிபால், 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் உள்ளிட்ட ஓட்டப்பந்தயங்கள் என பத்து வகையான விளையாட்டுப் போட்டிகள் முன்னாள் ராணுவ வீரர்களுக்காக நடத்தப்பட்டது. 50 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.