சமீபத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதைக் கொண்டாடும் விதத்தில், 15 கிலோ மீட்டர் தூரம் வரை மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை அமைச்சர் கே.சி. வீரமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலத்தில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.