2019ஆம் ஆண்டுக்கான ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் மஸ்கட்டில் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று நடைபெற்ற ஆடவருக்கான ஒற்றையர் சுற்று அரையிறுதிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன், ஸ்வீடனைச் சேர்ந்த மேட்டியாஸ் பிளாக்குடன் மோதினார்.
டேபிள் டென்னிஸ்: சென்னை வீரர் வெண்கலம் வென்று அசத்தல்! - சத்யன்
மஸ்கட்: ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடரில், இந்திய வீராங்கனை அர்ச்சனா வெள்ளிப்பதக்கமும், இந்திய வீரர் சத்யன் வெண்கலப்பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர்.
ஓமன் டேபிள் டென்னிஸ் வெண்கலம் வென்றார் சத்யன்
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், சத்யன் 8-11,11-7, 9-11,11-9,10-12 என்ற கேம் வித்தியாசத்தில் பிளாக்குடன் போராடித் தோல்வி அடைந்தார். இதனால் இவருக்கு வெண்கலப் பதக்கம் மட்டுமே கிடைத்தது.
இதேபோல் 21வயதுக்கு உட்பட் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அர்ச்சனா கமத், 7-11, 8-11, 6-11 என்ற கேம் கணக்கில் ஜப்பானின் முதல் நிலை வீராங்கனையானசட்சுகி ஓடோவிடம் தோல்வியைத் தழுவினார். இதன் மூலம் இவர் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.