தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கால்பந்து வீரரின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்த விளையாட்டு அமைச்சகம்! - கால்பந்து வீரரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்த கால்பந்து வீரர் மனிடோம்பி சிங்கின் குடும்பத்தினரின் நிதி நெருக்கடியைத் தணிக்கும் நோக்கில் விளையாட்டு அமைச்சகம் சார்பாக ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

sports-ministry-sanctions-rs-5-lakh-for-family-of-deceased-footballer-manitombi-singh
sports-ministry-sanctions-rs-5-lakh-for-family-of-deceased-footballer-manitombi-singh

By

Published : Nov 6, 2020, 10:30 PM IST

இந்தியக் கால்பந்து அணியின் முன்னாள் கால்பந்து வீரர் மனிடோம்பி சிங். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உடல்நலப் பிரச்னை காரணமாக உயிரிழந்தார். இவர் கடந்த 2002ஆம் ஆண்டு மோகன் பகான் அணிக்காகவும், எல்ஜி கோப்பைக்கான வியட்நாம் சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்காக ஆடியவர்.

இந்நிலையில், இவரது குடும்பத்தினரின் நிதி நெருக்கடியைத் தணிக்கும் வகையில் விளையாட்டு அமைச்சகம் சார்பாக தீன தயாள் உபாத்யாய் தேசிய நல நிதியம் ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.

இது குறித்து விளையாட்டுத் துறைக்கான மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூறுகையில், '' இந்தியக் கால்பந்து மேம்பாட்டுக்காக மனிடோம்பி பல தயாகங்களை செய்துள்ளார். மனிப்பூர் அணிக்கு பயிற்சியாளராகவும் பங்களித்துள்ளார். அவரின் இழப்பு விளையாட்டுத் துறைக்கு பெரும் இழப்பு.

அவர் இல்லாத சூழலில், அக்குடும்பத்தினர் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக அறிந்தோம். இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவுவது நமது கடமை. அதேபோல் முன்னாள், இந்நாள் விளையாட்டு வீரர்களுக்கு உதவி வேண்டியது அரசின் கடமையாகும். அதனால் அவர்களது நிதி நெருக்கடிப் பிரச்னையைத் தணிக்கும் நோக்கில் தீன தயாள் உபாத்யாய் தேசிய நல நிதியத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.

இதையும் படிங்க:ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்கிறார் சூர்யகுமார்: மைக்கேல் வாஹன்!

ABOUT THE AUTHOR

...view details