மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பாக இந்தியாவில் உள்ள 54 தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கி உத்தரவிடப்பட்டது. இதில் பாராலிம்பிக் கூட்டமைப்பு, ரோவிங் ஃபெடரேஷன், ஜிம்னாஸ்டிக்ஸ் ஃபெடரேஷன், சுசில்குமார் பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு ஆகியவற்றிற்கான அங்கீகாரங்கள் மறுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான விளையாட்டுக் கூட்டமைப்புகளுக்கு ஓராண்டு கால அளவில் அங்கீகாரம் வழங்கப்படும். ஆனால் இந்தாண்டு செப்டம்பர் மாதம் வரையில் மட்டுமே அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரிந்தர் பத்ரா, விளையாட்டு அமைச்சகத்தின் அங்கீகாரங்கள் டிசம்பர் மாதம்வரை வழங்கப்படாமல் செப்டம்பர் மாதம்வரை வழங்கப்பட்டது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.