திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் அருகே காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகத்தில் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
இந்தப்போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா என ஆறு மாநிலங்களில் இருந்து 61 பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சதுரங்கப் போட்டிகள் இன்று தொடங்கியது. இப்போட்டியில் சுமார் 366 கல்லூரி மாணவர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
தென் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி இந்த சதுரங்கப் போட்டியை மதுரை மண்டல துணை ஆணையாளர் பாஸ்கரன், பன்னாட்டு சதுரங்க நடுவர் அனந்தராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் கிழக்கு மேற்கு மற்றும் வடக்கு ஆகிய பிராந்தியங்களில் இருந்து 12 அணிகள் தேர்வு செய்து, அதில் முதல் 4 இடங்களைப் பெறும் அணிகள், வருகிற டிசம்பர் 27ஆம் தேதியன்று அகில இந்திய சதுரங்கப் போட்டியில் பங்கேற்பர் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை முறியடித்த ஹோப்!