டோக்கியோ (ஜப்பான்): டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் அனைவரும் ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்று சான்றளிக்கப்பட்ட பின்னரே ஒலிம்பிக் கிராமத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், தென் கொரியா நாட்டின் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனும், தற்போதைய தென் கொரியா டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவருமான ரியூ சியூங்-மின் டோக்கியோ வந்துள்ள நிலையில், அவருக்கு நரிட்டா விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அந்தப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு டோஸ் செலுத்தியவர்
இதுகுறித்து சியூங்-மின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மிகுந்த மனவருத்தத்துடன் இந்த ஒலிம்பிக் தொடரில் கலந்துகொள்ள முடியாது என்ற தகவலை இங்கு பகிர்கிறேன்.