தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#RWC2019: மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த தென் ஆப்பிரிக்கா! - முதல் அரையிறுதிப் போட்டி

டோக்கியோ: உலகக்கோப்பை ரக்பி தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 19-16 என்ற புள்ளிக்கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Rugby worldcup semies results

By

Published : Oct 28, 2019, 9:48 AM IST

RWC2019: ஜப்பானில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை ரக்பி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் நான்கு பிரிவுகளில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. இதில் குரூப் பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றன. அதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப்போட்டிகளின் முடிவில் நடப்பு சாம்பியனான நியூசிலாந்து, இங்கிலாந்து, வேல்ஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன.

இத்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 19-07 என்ற புள்ளிக்கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதன்பின் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, வேல்ஸ் அணியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் சற்று துடிப்புடன் செயல்பட்டதால் அந்த அணி முதல் பாதியின் முடிவில் 9-6 என முன்னிலை வகித்தது.

பின்னர் இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய தென் ஆப்பிரிக்க அணி ஆட்டநேர முடிவில் 19-16 என்ற புள்ளிகள் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி ரக்பி உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதையும் படிங்க: நியூசிலாந்தின் உலகக்கோப்பை கனவை மீண்டும் தகர்த்த இங்கிலாந்து!

ABOUT THE AUTHOR

...view details