போபால்:இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிது. முதல் 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. 3ஆவது டி20 போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்களை குவித்ததது.
அதிகபட்சமாக ரூசோவ் 48 பந்துகளில் 100 ரன்களையும், குயிண்டன் டி காக் 43 பந்துகளுக்கு 68 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்து வீச்சில் உமேஷ் யாதவ், தீபக் சஹார், அக்சார் பட்டேல் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.