சர்வதேச சாஃப்ட் பேஸ் பால் போட்டிகள் நேபாளம் பொக்ரா பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 68 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இந்த வகையில் திருச்சியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பத்து பேர் இப்போட்டியில் கலந்துகொண்டனர். தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்டதில் 18 பேர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில், திருச்சியிலிருந்து சென்றவர்கள் இன்று தங்களது சொந்த ஊர் திரும்பினர். தங்கப்பதக்கத்துடன் வந்த அவர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.