மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்தாண்டு பத்ம விருதுகள் பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் விளையாட்டுத் துறையில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமிற்கு பத்ம விபூஷண் விருதும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டது.
இவர்கள் தவிர முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகிர் கான், கால்பந்து வீராங்கனை ஓய்னாம் பெம்பெம் தேவி, ஹாக்கி வீரர் எம்பி கணேஷ், வீராங்கனை ராணி ராம்பால், துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜித்து ராய், வில்வித்தை வீரர் தருண்தீப் ராய் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்தப் பட்டியலில் இடம்பெறாத இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து தனது ட்விட்டர் வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் வினேஷ் போகத், ' ஒவ்வொரு ஆண்டும் அரசு பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு விருது அளிக்கிறது. இந்த விருதுகள் விளையாட்டு மற்றும் தடகள வீரர்கள் மேலும் சிறந்து செயல்படுவதற்கு ஊக்கமளிக்கிறது.