கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக இந்தாண்டு நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் வைரஸின் அச்சுறுத்தலினால் வரவுள்ள பெய்ஜிங் ஒலிம்பிக் 2022, ஸ்னோபோர்டிங் உலக சாம்பியன் போன்ற அனைத்து விதமான பனிச்சறுக்கு விளையாட்டுகளையும் தற்காலிகமாக ரத்து செய்வதாக சர்வதேச ஸ்கை கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்கை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பனிச்சறுக்கு விளையாட்டு பங்கேற்கும் வீரர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து பயணம் செய்யவேண்டியுள்ளதாலும், வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாலும், பனிச்சறுக்கு விளையாட்டு போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி ஸ்னோபோர்டிங் உலக சாம்பியன்ஷிப், ஃப்ரீ ஸ்டைல் உலக சாம்பியன்ஷிப், பனிச்சறுக்கு உலகக்கோப்பை, கிராஸ் கன்ட்ரி பனிச்சறுக்கு, ஸ்கை ஜம்பிங் ஆகிய பனிச்சறுக்கு விளையாட்டு தொடர்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும் இத்தொடர்களுக்கான மாற்று தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச ஸ்கை கூட்டமைப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கும்" என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2021இல் புதிதாக இரண்டு அணிகளா? பிசிசிஐ சொல்வது என்ன!