ஜெர்மனியில் இன்று(மார்ச்.10) நடந்த ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து சீன வீராங்கனை ஜாங் யி மேனை எதிர்கொண்டார். இறுதியில் 14-21 21-15 14-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
முன்னதாக முதல் செட் ஆட்டத்தைச் சிந்து 14-21 என்ற கணக்கில் இழந்தார். இருப்பினும் இரண்டாவது செட் ஆட்டத்தில் 21-15 என்று போராடி வென்றார். இதையடுத்து வெற்றி நிர்ணயிக்கும் மூன்றாவது செட் ஆட்டத்தில் 14-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.