தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#ISSFWorldCup: இறுதி நாளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா! பதக்க எண்ணிக்கை 9 - மனு பாக்கர்

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் முடிவில் இந்திய அணி 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 9 பதக்கங்களை குவித்துள்ளது.

issf world cup

By

Published : Sep 3, 2019, 11:06 AM IST

Updated : Sep 3, 2019, 12:28 PM IST

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றுவருகிறது. இதில் இறுதி நாளான நேற்று கலப்பு இரட்டையர் 10 மீ ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் மனு பாக்கர்-சவுரப் சவுத்ரி இணை, சக நாட்டைச் சேர்ந்த யசஷ்வினி சிங் தேஷ்வால்-அபிஷேக் வர்மா இணையுடன் மோதியது.

இந்தப்போட்டியில் மனு-சவுத்ரி இணை 400 புள்ளிகளுக்கு 394 புள்ளிகள் பெற்று தேஷ்வால்-அபிஷேக் இணையை வீழ்த்தி உலகக்கோப்பை கலப்பு இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது.

மேலும் தேஷ்வால்-அபிஷேக் இணை இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கமும் சீனாவின் ஜைன் ரான்ஷின்-பேங் வெய் இணை மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றது.

இதன்மூலம் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரில் இந்தியா இதுவரை 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெற்றது.

இதற்கு முன் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு போட்டிகளில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன், அபிஷேக் வர்மா, யசஷ்வினி தேஷ்வால் சிங், சண்டிலா-தீபக் குமார் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க..! துப்பாக்கிச் சுடுதலில் பதக்கங்களை குவிக்கும் இந்தியா!

Last Updated : Sep 3, 2019, 12:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details