2020ஆம் ஆண்டுக்கான ஐடிடிஎஃப் சேலஞ்சர் என அழைக்கப்படும் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடர் மஸ்கட்டில் நடந்தது. இதில் ஆடவர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷரத் கமல் கலந்துகொண்டார்.
37 வயதாகும் ஷரத் கமல், ஐடிடிஎஃப் டேபிள் டென்னிஸ் பதக்கம் வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. ஓமன் ஓபன் தொடரின் அரையிறுதியில் ரஷ்யாவின் கிரில் கச்னோவை அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்ததால், டேபிள் டென்னிஸ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இறுதிப் போட்டியில் போர்ச்சுகல் நாட்டின் மார்கோச் பிரைடஸை ஷரத் கமல் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் ஷரத் கமல் 6-11, 11-8, 12-10, 11-9, 3-11, 17-15 என்ற கணக்கில் அபாரமாக வெற்றிபெற்றார்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் ஷரத் கமல் பின்தங்கினாலும், பின்னர் அபாரமாக ஆடி வெற்றிபெற்று ஓமன் டெபிள் டென்னிஸ் தொடரைக் கைப்பற்றினார். 10 ஆண்டுகளுக்கு பிறகு ஷரத் கமல் ஐடிடிஎஃப் தொடரில் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கொரோனாவால் தடை செய்யப்படுமா ஒலிம்பிக்?