தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இரண்டாவது முறையும் கரோனா பாசிட்டிவ் - போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட மெக்சிகோ வீரர் - சில்வர்ஸ்டோன்

லண்டன்: பார்முலா ஒன் பந்தய வீரரான செர்ஜியோ பெரேஸுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வாரம் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் அவர் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sergio Perez
Sergio Perez

By

Published : Jul 31, 2020, 7:27 PM IST

கோவிட்-19 பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார்முலா ஒன் கார் பந்தயம், கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரியாவில் தொடங்கப்பட்டது. கரோனா காரணமாக, பார்முலா ஒன் கார் பந்தயங்கல் ரசிகர்களின்றி காலி மைதானத்தில் நடத்தப்பட்டுவருகிறது.

தற்போது வரை மூன்று போட்டிகளில் நிறைவடைந்துள்ளது. அவற்றில் இரண்டில் மெர்சிடிஸ் அணியின் லீவிஸ் ஹேமில்டன் வெற்றி பெற்றுள்ளார். அவர் 63 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அடுத்த போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை பிரிட்டனிலுள்ள சில்வர்ஸ்டோன் டிராக்கில் நடைபெறவுள்ளது. சொந்த மண்ணில் களமிறங்கவுள்ளதால் இந்தப் போட்டியில், ஆறு முறை உலக சாம்பியன் லீவிஸ் ஹேமில்டன் எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரேஸிங் பாயிணட் அணியின் செர்ஜியோ பெரேஸுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதல் முறை நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும், முடிவுகளில் தனக்கு சந்தேகம் இருப்பதாக செர்ஜியோ பெரேஸ் தெரிவித்ததைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வாரம் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் அவர் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டு விதிகளின்படி செர்ஜியோ பெரேஸ், 10 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறும் பார்முலா ஒன் 70ஆம் ஆண்டு விழா பந்தயத்தில் அவர் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்படும் முதல் பார்முலா ஒன் வீரர் செர்ஜியோ பெரேஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், செர்ஜியோ பெரேஸுக்கு பதிலாக ஜெர்மனியைச் சேர்ந்த 32 வயதான நிக்கோ ஹல்கன்பெர்க் ரேஸிங் பாயிணட் அணிக்காக பங்கேற்பார் என்றும் அந்த அணியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இனிதான் எனது ஆட்டம் ஆரம்பம் - டேவிட் வில்லி

ABOUT THE AUTHOR

...view details