லண்டன்:ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நேற்று முன்தினம் (ஜூன் 27) தொடங்கின. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று போட்டியில், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், பிரஞ்சு வீராங்கனை ஹார்மனி டான் உடன் மோதினார்.
காயம் காரணமாக 364 நாள்களுக்கு பின் விளையாட வந்த செரீனா, ஆரம்பத்தில் இருந்தே நிதானம் இன்றி விளையாடினார். 115ஆவது நிலை வீரரனா ஹார்மனி, 23 கிராண்ட் ஸ்லாமை வென்ற செரீனாவுடன் அசராமல் மோதினார். செரீனா, முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் இழந்தாலும், அடுத்த செட்டை 6-1 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து, ஆட்டத்தை முடிவும் செய்யும் மூன்றாவது சுற்றில், செரீனா - ஹார்மனி இருவரும் கடுமையாக போரட 6-6 என்ற செட் சமன் பெற்றது. இதனால், செட்டின் 7ஆவது புள்ளியை பெறுவதற்கு போட்டாப்போட்டி நிலவியது. கடைசியில், ஹார்மனி நான்காவது செட்டை 7-6 (10-7) என்ற கணக்கில் வென்று, செரீனாவை வீழ்த்தினார்.
40 வயதான செரீனா, இளம் வீரருடன் சரிக்கு சமமாக நின்று போராடியதை மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் வெகுவாக பாரட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இருப்பினும், நீண்ட நாள்களுக்கு பின் திரும்பி வந்த செரீனா மீண்டும் வெறுங்கையுடன் திரும்புவது ரசிகர்களை சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:Wimbeldon 2022: வெற்றியுடன் தொடங்கினார் நடால்!