தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அட்டவணை அறிவிப்பு! - தெற்காசிய விளையாட்டு போட்டிகள் 2019 அட்டவனை

நேபாளத்தில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

13th south asian games

By

Published : Nov 9, 2019, 7:37 PM IST

தெற்காசிய நாடுகளுக்கான 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்டு நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெறவுள்ளது. தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து, கபடி, மல்யுத்தம், உள்ளிட்ட 27 போட்டிகள் இந்தத் தொடரில் நடைபெறுகின்றன.

இந்நிலையில், 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் டிசம்பர் 10ஆம் தேதி நிறைவடைகிறது. இந்தத் தொடரில் நடைபெறும் 27 விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 17 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

இந்தத் தொடரில் இந்தியாவுடன் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகள் கலந்துகொள்கின்றன. 2016இல் கவுகாத்தியில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 188 தங்கம், 90 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 308 பதங்களை குவித்து பட்டியலில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஒலிம்பிக் வீரர்களுக்காக தயாராகும் பிரத்யேக இகோ பிரெண்ட்லி மெத்தைகள்!

ABOUT THE AUTHOR

...view details