63ஆவது தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் தனிநபர் பிரிவுக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவு தகுதிச் சுற்றுப் போட்டியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது நட்சத்திர வீரர் சவுரப் சவுத்ரி 583 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
இதையடுத்து நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய சவுரப் சவுத்ரி 246.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். அவரைத் தொடர்ந்து 24.39 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடம்பிடித்த ஹரியானாவின் சரப்ஜித் சிங்கிற்கு வெள்ளிப் பதக்கமும், அதே மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் வர்மா 221.1 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.