தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்: 10 மீ  பிரிவில் தங்கம் வென்றார் சவுரப் சவுத்ரி! - தங்கம் வென்றார் சவுரப் சவுத்ரி

போபல்: இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கிச் சுடுதல் வீரர் சவுரப் சவுத்ரி, தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

Saurabh Chaudhary
Saurabh Chaudhary

By

Published : Jan 5, 2020, 10:43 AM IST

இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கிச் சுடுதல் வீரராக வலம்வருபவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது சவுரப் சவுத்ரி. இவர் தற்போது நடைபெற்றுவரும் 63ஆவது தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றார்.

இத்தொடரில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்ட இவர், இறுதிச்சுற்றில் 246.4 புள்ளிகளைப் பெற்று தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றுள்ளார்.

இப்பிரிவில் ஹரியானாவைச் சேர்ந்த சரப்ஜோத் சிங் 243.9 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் அபிஷேக் வர்மா வெண்கலப்பதக்கத்தையும் தட்டிச்சென்றனர்.

மேலும் சவுரப் இதற்குமுன் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டிற்கு மீண்டும் திரும்பும் டேல் ஸ்டெயின்!

ABOUT THE AUTHOR

...view details