உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரவு மூன்றாம் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன், பிரேசில் வீரர் யூகோ கெல்டெரானோவுடன் (Hugo Calderano) மோதினார்.
டேபிள் டென்னிஸ்: சத்யன் தோல்வி! - sathyan
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன் தோல்வி அடைந்துள்ளார்.
சத்யன் ஞானசேகரன்
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், சத்யன் 6 -11, 3-11, 9-11, 9-11 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார். இந்த வெற்றியின் மூலம் பிரேசில் வீரர் யூகோ காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.