மேட்டியோ பெல்லிகோன் மல்யுத்தத் தொடர் இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்றுவருகிறது. இதில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சரிதா மோர் - பிரேசிலின் கியுலியா ரோட்ரிக்ஸை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் ரோட்ரிக்ஸ் 4-2 என்ற புள்ளிக்கணக்கில் சரிதாவை வீழ்த்தி, தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். மேலும் இப்போட்டியில் தோல்வியைத் தழுவிய சரிதா மோர் வெள்ளிப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.