டெல்லி: ஜனவரி 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2023 தொடங்குகிறது. இந்த நிலையில் இந்தியாவின் டென்னிஸ் ஸ்டார் சானியா மிர்சா, உலகளவில் நம்பர் 11 வீராங்கனையான கஜகஸ்தானின் அனா டானிலினா உடன் இணைந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் 2023இல் பங்கேற்க உள்ளார்.
இருப்பினும் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா யாருடன் போட்டியிட உள்ளார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பயிற்சியாளர் இம்ரான் மிர்சா கூறியுள்ளார். முன்னதாக சானியா மிர்சா இரண்டு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளார்.