தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு சந்தீப், ராகுல், பிரியங்கா தேர்வு! - சந்தீப் குமார்

இந்தாண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான 20 கி.மீ நடைபயிற்சி பிரிவுக்கு இந்தியாவின் பிரியாங்கா கோஸ்வாமி, சந்தீப் குமார், ராகுல் குமார் ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர்.

Sandeep, Rahul, Priyanka qualify for Olympics race walking event
Sandeep, Rahul, Priyanka qualify for Olympics race walking event

By

Published : Feb 13, 2021, 1:01 PM IST

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தேசிய நடைபயிற்சி சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றன. இதில் ஆடவர் பிரிவில் ஹரியானாவைச் சேர்ந்த சந்தீப் குமார் ஒரு மணி நேரம் 20 நிமிடம் 16 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கத்தையும், ராகுல் குமார் ஒரு மணி நேரம் 20 நிமிடம் 26 விநாடிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

மகளிர் பிரிவில் உத்தரப் பிரதேசதைச் சேர்ந்த பிரியங்கா கோஸ்வாமி வெற்றி இலக்கை ஒரு மணி நேரம் 28 நிமிடம் 45 விநாடிகளில் அடைந்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். அதேபோல் நடைபயிற்சி வெற்றி இலக்கை குறுகிய காலத்தில் கடந்த பவானா ஜாட்டின் தேசிய சாதனையையும் முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.

இதன் மூலம் இந்தாண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் 20 கி.மீ. நடைபயிற்சி பிரிவிற்கு ஆடவர் பிரிவில் சந்தீப் குமார், ராகுல் குமார் ஆகியோரும், மகளிர் பிரிவில் பிரியங்கா கோஸ்வாமி ஆகியோர் இந்தியா சார்பில் தகுதி பெற்றனர்.

இதையும் படிங்க:2ஆவது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்; குல்தீப், சிராஜ், அக்சர் சேர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details