கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் நான்கு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நான்காம் கட்ட ஊரடங்கில் விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்திருந்தது. இதனால் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த இந்திய தடகள வீரர்கள், தற்போது இந்திய விளையாட்டு ஆணையம் கூறியுள்ள தகவலினால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
அதில், ”மத்திய அரசின் ஒப்புதல்படி விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால், தற்போது பயிற்சியை மேற்கொள்ளும் வீரர்கள் தங்களது சொந்த பாதுகாப்பில் மட்டுமே பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்திய விளையாட்டு ஆணையம் தடகள வீரர்களின் பாதுகாப்பில் கவனம் கொள்ளாமலும், அவர்களது உடல்நிலை மீது அக்கறை கொள்ளாமலும் ஆணையம் இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:அந்த பந்தில் சச்சின் சிக்சர் அடிப்பார் என எதிர்பார்த்தேன்: அக்தரின் ஃபேன் பாய் மொமண்ட்...!