தென் கொரியாவின் இன்ச்சியான் நகரில் ஆசிய டிராக் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வீரர், வீராங்கனைகளும் கலந்துகொண்டனர்.
சைக்கிள் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற ரொனால்டோ! - இந்திய வீரர் ரொனால்டோ சிங்
ஆசிய டிராக் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ரொனால்டோ சிங் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இதில் ஜூனியர் ஆடவர் கெய்ரின் (Keirin) பிரிவில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்ட இந்திய வீரர் ரொனால்டோ சிங் தங்கப்பதக்கமும், ஜேம்ஸ் சிங் வெண்கலமும் வென்று அசத்தினர். இந்தத் தொடரில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஸ்ப்ரிண்ட் அணிகள் வெண்கலப்பதக்கங்கள் கைப்பற்றின. வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற அனைத்து வீரர்களுக்கும் இந்திய விளையாட்டு ஆணையம் வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டது.
ரொனால்டோ என்ற பெயரைக் கேட்டதும் அனைவருக்கும் போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயரே நினைவுக்கு வரும். ஆனால் தற்போது சைக்கிள் பந்தயத்திலும் அந்த பெயரின் பாதியைக் கொண்ட இளம் வீரர் ரொனால்டோ இந்தியா சார்பில் தனது முத்திரையை பதித்துள்ளார்.