சண்டிகர் (ஹரியானா): டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி பதக்கம் வென்றார். இதையடுத்து, அவருக்கு முதல்நிலை அரசு வேலை, பரிசுத்தொகையாக ரூ.4 கோடி ரூபாய், ஹரியானவில் எந்த இடத்தில் வேண்டுமானலும் 50 விழுக்காடு சலுகையில் நிலம் வாங்கிக்கொள்ளலாம் போன்ற பல சலுகைகளை ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
மல்யுத்த மைதானம்
மேலும், சோனிபட் நகரத்தில், மல்யுத்த வீரர் ரவிக்குமாரின் தாஹியாவின் சொந்த ஊரான நஹ்ரி கிராமத்தில் மல்யுத்தத்திற்கான உள்அரங்க மைதானம் ஒன்று அமைக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
அரசின் அளித்துள்ள சலுகைகளுக்கும், புதிய மைதானத்தின் கட்டுமான அறிவிப்புக்கும் ரவிக்குமார் தாஹியா, அம்மாநில முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் காணொலி வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.