பள்ளிக் கல்வித்துறை சார்பில் சேலம் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டிகள் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது .
இந்தக் குத்துச்சண்டை போட்டியில் 14 முதல் 19 வயது வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர் .
மாநில அளவிலான குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டி இந்தக் தகுதிச்சுற்று போட்டியில் முதலிடம் பெறும் அணியினர் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.
இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட உடற்கல்வி அலுவலர் நிர்மலாதேவி உள்ளிட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: 9 ஆண்டுகளுக்கு பிறகு, ஜிம்னாஸ்டிக் ஃபெடரேஷன் நிர்வாகிகள் தேர்வு..!