2019ஆம் ஆண்டுக்கான ஆசிய தடகளப் போட்டிகள் கத்தாரின் தோகா நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் பெண்களுக்கான 1500 மீ ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாடு வீராங்கனை பி.யூ.சித்ரா கலந்துகொண்டார்.
தங்கம் வென்ற இந்திய வீராங்கனை சித்ரா! - ஆசிய தடகள சாம்பியன்ஷிப்
தோகா: 23ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 1500 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சித்ரா தங்கப்பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளனர்.
தோகா
இதில் பந்தயம் தொடங்கியது முதலே கவனமாக ஓடிய சித்ரா, பந்தய தூரத்தை 4 நிமிடங்கள் 14 வினாடிகளில் கடந்து தங்கம் வென்று சாதனைப் படைத்தார். இது குறித்து அவர் பேசுகையில், இறுதிவரை பக்ரைன் வீராங்கனை எனக்கு அருகிலேயே வந்துகொண்டிருந்தார். எனவே சிறிது பதற்றம் ஏற்பட்டது. அதனால் வெறிகொண்டு ஓடி பந்தய தூரத்தைக் கடந்தேன் எனத் தெரிவித்தார்.
ஆசிய தடகளப் போட்டியில் சித்ரா வெல்லும் மூன்றாவது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.