கிரிக்கெட், கபடி போட்டிகளைத் தொடர்ந்து அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் இந்தியாவில் பிரபலமடைந்து வருகின்றன. அந்த வரிசையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட புரோ வாலிபால் லீக் எனப்டும் கைப்பந்து போட்டியும் பெரும் வரவேற்பை பெற்றது.
ஐபில், புரோ கபடி லீக் போட்டிகளைப் போலவே வாலிபால் போட்டிகளிலும் வெளிநாட்டின் பிரபல வீரர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. முதல் சீசனில் தமிழகத்தின் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி, கேரளாவின் காலிக்கட் ஹிரோஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.