தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

புரோ கபடி: பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் வீழ்ந்த தமிழ் தலைவாஸ்..! - கபடி செய்திகள்

Pro Kabaddi: 10வது புரோ கபடி லீக் சுற்றில் இன்று நடைபெற்ற போட்டியில் 48-38 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Pro kabaddi 2023
Pro kabaddi 2023

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 11:09 PM IST

பெங்களூரு: புரோ கபடி லீக் தொடரின் 10-வது சீசன் கடந்த 2ஆம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், உபி யோதாஸ், யு மும்பா, தெலுங்கு டைட்டன்ஸ், பாட்னா பைரேட்ஸ் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன.

இந்நிலையில், இன்று (டிச.10) இரவு நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. இப்போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக விளையாடி வந்தன. ஆட்டத்தின் பாதி நேர முடிவில் பெங்கால் அணி 21, தமிழ் தலைவாஸ் அணி 27 புள்ளிகளுடன் இருந்தன.

இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய பெங்கால் அணி ஆட்ட நேர முடிவில் 48 புள்ளிகளைப் பெற்றது. ஆனால் தமிழ் தலைவாஸ் அணி 38 புள்ளிகளை மட்டுமே பெற்றதால் பெங்கால் வாரியர்ஸ் அணி அபார வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில் தபாங் டெல்லி - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதியது. சரிக்குச் சமமாகச் சென்ற இப்போட்டியில் இறுதி கட்டதில் ஹரியனா அணி 33-35 என்ற புள்ளி கணக்கில் திரில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க:IND U19 vs PAK U19 : பாகிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி! பாக். பவுலரின் வைரல் வீடியோ! இந்திய ரசிகர்கள் ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details