புரோ கபடி லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பெங்களூரு புல்ஸ் அணி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் இரண்டு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் இணையாக விளையாடினர். எனினும் ரைய்டிங், டிஃபெண்டிங் என இரண்டிலும் பெங்களூரு புல்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியதால், அந்த அணி முதல் பாதியில் 17-16 என முன்னிலை வகித்தது. ஆனால் பிற்பாதி ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய ஹரியானா வீரர்கள் புள்ளிகளை தொடர்ந்து பெற்றனர்.
ஒரு கட்டத்தில் இரு அணியும் தொடர்ச்சியாக சமபுள்ளிகளுடன் ஆடின. இறுதியில் ஹரியானா வீரர் விகாஸ் கண்டோலா சிறப்பாக செயல்பட்டதோடு இறுதிக்கட்டத்தில் ரெய்டு மூலமாக இரண்டு புள்ளிகள் பெற்றுத்தந்தார். இதனால் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 33-30 என்ற புள்ளிகள் த்ரில் வெற்றியை பதிவு செய்தது.
குஜராத் - தெலுங்கு அணியின் போட்டியில் பரபரப்பான காட்சிகள் இதேபோன்று மற்றொரு அரையிறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சூன் ஜெயண்டஸ், தெலுங்கு டைடன்ஸ் அணிகள் மோதின. இதில் சிறப்பாக ஆடிய தெலுங்கு அணி 30 - 24 புள்ளி கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.