பெங்களூரு: ப்ரோ கபடி 2021-22 தொடர் டிசம்பர் 22ஆம் தேதி தொடங்கியது. 10ஆம் நாளான இன்று (ஜனவரி 1) இரண்டு போட்டிகள் முடிவடைந்தது. மூன்றாவது போட்டியாக, தபாங் டெல்லி கே.சி அணியோடு தமிழ் தலைவாஸ் அணி மோதுகிறது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் சம புள்ளிகளோடு விளையாடி வந்தன. அதன்பின்னர், தமிழ் தலைவாஸ் முன்னிலை பெற தொடங்கியது. இருப்பினும், கடைசி ஐந்து நிமிடத்தில் டெல்லி அணி சுதாரித்துக்கொண்டது.
இதனால், முதல் பாதியில் டெல்லி அணி 16 -14 என்ற புள்ளிகளுடன் முன்னிலை பெற்றது. ஆட்டத்தை தீர்மானிக்கும் இரண்டாம் பாதியை நோக்கி இரு அணி ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், தமிழ் தலைவாஸ் அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்றது.