பர்மிங்ஹாம்:72 நாடுகள் பங்கேற்றுள்ள 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், மகளிர் பிரிவு 10 ஆயிரம் மீட்டர் நடை ஒட்டப்பந்தயத்தின் இறுதிப்போட்டி இன்று (ஆக. 6) நடைபெற்றது.
இதில், இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி, பாவ்னா ஜாட் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பிரியங்கா, 10 ஆயிரம் மீட்டர் தூரத்தை 43 நிமிடங்கள் 38.82 விநாடிகளில் கடந்து இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியா 9 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்லம் வென்று 5ஆவது இடத்தில் உள்ளது.