சீனாவின் ஷாங்காய் நகரில் 15ஆவது உஷூ உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், 48 கிலோ ஆடவர்பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் குமார், ஃபிலபைன்ஸ் நாட்டின் ரசல் டியாஸை எதிர்கொண்டார்.
உஷூ சாம்பியன்ஷிப் - தங்கம் வென்று சாதனை படைத்த முதல் இந்திய வீரர்
ஷாங்காயில் நடைபெற்ற உஷூ உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பிரவின் குமார் படைத்துள்ளார்.
Praveen Kumar wushu
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பிரவின் குமார் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் ரசலை வீழ்த்தி தங்கப் பதக்கம் பெற்றார். இதன்மூலம், உஷூ உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாக, 2017இல் இந்தத் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை பூஜா கடியான் என்பவர் படைத்துள்ளார். மகளிர் 75 கிலோ பிரிவில், ரஷியாவின் ஸ்டெப்பனோவோவை வீழ்த்தி அவர் இச்சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.