சென்னை: அஜர்பைஜான் பாகு நகரில் நடைபெற்ற ஃபிடே உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய கிரண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை டைபிரேக்கரில் 1.5 - 0.5 என்ற புள்ளிகள் கணக்கில் நம்பர் ஒன் வீரரான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இது கார்ல்செனுக்கு 6வது சாம்பியன் பட்டம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளாக உலக தரவரிசையில் முதல் இடம் வகிக்கும் நார்வே வீரரான கார்ல்சென், ஏற்கனவே உலக சாம்பியன் பட்டத்தை 5 முறை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், தமிழக வீரரான பிரக்ஞானந்தா 21 ஆண்டுகள் கழித்து இறுதி போட்டிக்கு சென்ற இந்திய வீரர் என்ற சிறப்பையும் தன் வசப்படுத்தினார்.
உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த மார்க்னஸ் கார்ல்செனுக்கு கடும் போட்டியாளராக திகழ்ந்து இறுதி போட்டியில் தோல்வியை தழுவினாலும், இரண்டாவது இடம் பிடித்து வெள்ளியை வென்று அடுத்த ஆண்டு நடைபெறும் Candidates 2024 போட்டிக்கு தமிழக வீரர் பிரக்ஞானந்தா தகுதி பெற்று உள்ளார்.
இதையும் படிங்க:உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரைஇறுதிக்கு முன்னேறிய பிரணாய் - சாத்விக்/சிராக் ஷெட்டி தோல்வி
இதனை தொடந்து, சினா ஹாங்ஷெள நகரில் ஆசிய போட்டி வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறுகின்றன. இதற்காக கொல்கத்தாவில் வரும் 30ஆம் தேதி முதல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாமில், பிரக்ஞானந்தா பங்கேற்று பயிற்சி பெற உள்ளார். இவருடன் சக வீரர்களான விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி, டி குகேஷ், பெண்டாலா ஹரிகிருஷ்ணா ஆகியோரும் பயிற்சி பெற உள்ளனர்.
இந்நிலையில் ஃபிடே உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா சில வார்த்தைகளை தனது X (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியதாவது, "உலக கோப்பை இறுதி போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று அடுத்த ஆண்டு நடைபெறும் Candidates 2024 போட்டிக்கு தகுதி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி! உங்கள் ஒவ்வொருவரின் அன்பு, அதரவு மற்றும் பிரார்த்தானைகளுக்கும் எனது சார்பில் எனது அதரவு, மற்றும் பெருமைமிக்க அம்மா சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்று கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பதிவுட்டு உள்ளார்.
இதையும் படிங்க:Virat Kohli: விராட் கோலி 4வது வீரராக களம் இறக்க ஆதரவு....ஏபி வில்லியர்ஸ் கருத்து!