உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஒ.சி.) சார்பில் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், 32ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால், கரோனா தீநுண்மி பெருந்தொற்று காரணமாக இந்தத் தொடர் அடுத்தாண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டதால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் இழப்பு நேரிட்டுள்ளதாக அதன் தலைவர் தாமஸ் பாச் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டதால் நேரிட்ட பல நூறு மில்லியன் டாலர் இழப்புகளைச் சரிசெய்ய வேண்டும் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். எனவே இப்போட்டிக்காக நாங்கள் ஏற்கனவே வழங்கவிருந்த அனைத்து சேவைகளையும் மீண்டும் மறு ஆய்வுசெய்ய வேண்டும். ஒத்திவைக்கப்பட்ட இப்போட்டிக்கு ஏற்படும் செலவுகளுக்கும், செயல்பாட்டுச் சுமைகளுக்கும் ஐ.ஓ.சி. தொடர்ந்து பொறுப்பேற்கும்.