'அண்டர் 23' எனப்படும் 23 வயதிற்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை தொடர் ஹங்கேரி தலைநகரான புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் பூஜா கெலாட், ஜப்பானின் ஹருணா ஒகுனோவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தனது ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹருணா 2-0 என்ற கணக்கில் பூஜா கெலாட்டை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பறினார். இத்தோல்வியின் மூலம் பூஜா கெலாட் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை தொடரில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.