ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் 23 வயதுக்குள்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் மகளிர் 53 எடைப்பிரிவில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் வெற்றிகளைப் பெற்ற இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.
23 வயதுக்குள்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை அரையிறுதியில் இந்திய வீராங்கனை - உலக குத்துச்சண்டை சாம்பியன்சிப்
புடாபெஸ்ட்: 23 வயதுக்குள்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா கெலாட் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
pooja gehlot
காலிறுதிப்போட்டியில் 8-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் துருக்கியின் ஜெனெப் யெட்கில்லை எதிர்கொள்கிறார்.
இந்தத் தொடரில் பிற இந்திய வீராங்கனைகள் எல்லாம் தோல்வியைத் தழுவி வெளியேறினர். அதில் 50 கிலோ எடைப்பிரிவில் ஜோதி என்ற வீராங்கனை மட்டும் வெண்கலத்திற்கான போட்டியில் களமிறங்கவுள்ளார்.
Last Updated : Nov 1, 2019, 1:25 PM IST