தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சாம்பியன்களுக்கெல்லாம் சாம்பியன் சிந்து - பிரதமர் மோடி புகழாரம் - காமன்வெல்த்

காமன்வெல்த் தொடரில் மகளிர் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பிவி சிந்துவிற்கு, பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சாம்பியன்களுக்கெல்லாம் சாம்பியன் சிந்து - பிரதமர் மோடி புகழாரம்
சாம்பியன்களுக்கெல்லாம் சாம்பியன் சிந்து - பிரதமர் மோடி புகழாரம்

By

Published : Aug 8, 2022, 5:00 PM IST

டெல்லி: காமன்வெல்த் 2022 தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதுவரை இந்தியா 19 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என 56 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ள மகளிர் கிரிக்கெட்டில் நேற்று இந்தியா வெள்ளி வென்றது. அதுமட்டுமின்றி, டேபிள் டென்னிஸில் தங்கம், மகளிர் ஹாக்கியில் வெண்கலம் வென்று இந்திய வீரர்கள் மிரட்டினர்.

இந்நிலையில், இத்தொடரின் இறுதிநாளான இன்று (ஆக. 8) இந்தியா பேட்மிண்டன், ஆடவர் ஹாக்கி, டேபிள் டென்னிஸ் ஆகியவற்றில் பதக்கம் வெல்லும் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து தங்கம் வென்று அசத்தினார். காமன்வெல்த் தொடரின் முதல்முறையாக பிவி சிந்து தங்கத்தைக் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து, பிவி சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்,"தனித்துவம் வாய்ந்த பிவி சிந்து, சாம்பியன்களுக்கு எல்லாம் சாம்பியன், தொடர்ந்து அவரின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். அவரின் அர்ப்பணிப்பும், ஈடுபாடும் பெரும் ஊக்கத்தை அளிக்கிறது. காமன்வெல்த் தொடரில் தங்கம் வென்றதற்கு எனது வாழ்த்துகள். எதிர்கால முயற்சிகளும் இதுபோன்று சிறப்பாக அமைய வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற சரத் கமல், ஸ்ரீஜா அகுலா, இந்தியா மகளிர் கிரிக்கெட் அணி, மகளிர் ஹாக்கி அணி, ஆகியோரின் கூட்டு முயற்சிக்கும் பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காமன்வெல்த் 2022: தங்கம் வென்றார் பிவி சிந்து!

ABOUT THE AUTHOR

...view details