தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டோக்கியோ வீராங்கனை பவானி தேவியின் வாளை ஏலத்திற்கு விட்ட பிரதமர் - the fence of Bhavani Devi in the e-auction

வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி டோக்கியோ ஒலிம்பிக்கில் பயன்படுத்திய வாள், பிரதமருக்கு வந்த பரிசு பொருட்கள் மின் ஏலம் (e-auction) விடும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பவானி தேவி, பவானி தேவி மோடி, bhavani devi, bhavani devi modi
பவானி தேவி

By

Published : Sep 27, 2021, 10:39 PM IST

டெல்லி: அண்மையில் நிறைவடைந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனையான பவானி தேவி பயன்படுத்திய வாள் pmmementos.gov.in என்ற இணையதளத்தில் ஏலம் விடப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவின்போது இதே வாளை பவானி தேவி, பிரதமருக்குப் பரிசாக அளித்தார். பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள், நினைவுப் பொருட்களும் இந்த மின் ஏலத்தில் இடம்பெற்றுள்ளன.

நமாமி கங்கை திட்டத்திற்கு நன்கொடை

இதற்கு முன்பு கடந்த 2019ஆம் ஆண்டு இதே போன்ற ஏலம் ஒன்று நடைபெற்றது. அதன் மூலம் அரசுக்குக் கிடைத்த ரூ. 15.13 கோடி முழுவதும் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்கீழ் கங்கை நதியின் தூய்மை பணிக்காக நமாமி கங்கை திட்டத்திற்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை நமாமி கங்கை திட்டத்திற்கு அளிக்கப்படும்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸில், பவானி தேவி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பெற்றார். எந்த ஒரு இந்திய வாள் வீச்சு வீராங்கனையும் இத்தகைய நிலை வரை செல்லாததால் இது மிகப்பெரும் சாதனையாக அமைந்தது. பதக்கத்திற்கான முந்தையப் போட்டியில் அவர் வெற்றி பெறாவிட்டாலும், இந்தியாவின் நம்பிக்கை, எழுச்சியை அதிகரிப்பதற்கு இதுவே போதுமானதாக இருந்தது.

அக்டோபர் 7ஆம் தேதி வரை

சென்னையைச் சேர்ந்த சி. ஏ. பவானி தேவி சிறுவயதில் விளையாட்டின்மீது தீவிரமாக ஈடுபாடு வைத்துள்ளார். முதலில் வாள்வீச்சில் பெரிதும் அவருக்கு ஆர்வம் இல்லாமல் இருந்த நிலையில், பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள அவர் முடிவு செய்தபோது வாள் வீச்சை தேர்வு செய்ய நேர்ந்தது. புதுவிதமான விளையாட்டில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு அதில் பயிற்சி பெற்றார்.

நாட்டின் பெருமைமிகு வரலாற்று சிறப்புமிக்க இந்த வாளைப் பெறுவதற்கு கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி முதல் வரும் அக்டோபர் 7ஆம் தேதி வரை நடைபெறும் மின் ஏலத்தில் பங்கேற்று பவானி தேவியின் வாளை ஏலத்தில் வெல்ல முடியும்.

இதையும் படிங்க: பிரதமர் வடிவில் தந்தையைப் பார்த்தேன்- பவானி தேவி!

ABOUT THE AUTHOR

...view details