இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தொகுத்து வழங்கும் A Game நிகழ்ச்சியில், ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் பங்கேற்றார்.
அதில் அவர் பேசுகையில், ''ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக வெளிநாட்டில் ஒரு முகாம் நடந்தது. இந்திய மல்யுத்த வீரர்கள் அனைவரும் பங்கேற்றோம். அதில் மற்ற நாட்டு முன்னணி வீராங்கனைகளுடன் பயிற்சி பெற முடிந்தது. அதன்மூலம் பல டெக்னிக்குகளையும், அனுபவத்தையும் பெற்றேன்.
என் வாழ்வில் அந்த மூன்று மாத காலம் மிகவும் முக்கியமானதாக அமைந்தது. நான் ஒலிம்பிக் பதக்கம் வென்றதற்கு முக்கியக் காரணம் அது. அந்தப் போட்டியின்போது நான் 0-5 எனப் பின்தங்கியிருந்தேன். அப்போது என் பயிற்சியாளர் குல்தீப், அட்டாக்கிங் ஆட்டத்தை ஆடுமாறு ஆலோசனை வழங்கினார்.
சாக்ஷி மாலிக் - பயிற்சியாளர் குல்தீப் எனக்கு இயல்பாகவே அட்டாக்கிங் ஆட்டம்தான் வரும். அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. நான் புள்ளிகளை வெல்ல தொடங்கினேன். கடைசி நொடி வரை நான் நம்பிக்கையை இழக்கவில்லை. எனது 100 விழுக்காட்டுத் திறனையும் வெளிப்படுத்தி ஒலிம்பிக் பதக்கத்தை கைப்பற்றினேன்'' என்றார்.
இதையும் படிங்க:ஜீரோ டூ ஹீரோ: ஐபிஎல் 2020இல் ஸ்பார்க் அதிகமாக தென்பட்ட இளம் வீரர்கள்!