தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மாவட்ட எறிபந்து போட்டி: சேலத்தில் எறிபந்து போட்டி வீரர்கள் தேர்வு ! - Salem District Uthamacholapuram

சேலத்தின் பிரதிநிதிகளாக பங்கேற்க செல்லும் வீரர் வீராங்கனை தேர்வு இன்று(நவ.12) சேலம் உத்தமசோழபுரத்தில் நடைபெற்று வருகிறது.

எறிபந்து போட்டி வீரர்கள் தேர்வு
எறிபந்து போட்டி வீரர்கள் தேர்வு

By

Published : Nov 12, 2020, 1:55 PM IST

சேலம்:மாவட்ட அளவிலான எறிபந்து போட்டிக்கான வீரர் வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கும் தேர்வு இன்று(நவ.12) சேலம் மாவ‌ட்ட‌ம் உத்தமசோழபுரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாநில அளவிலான எறிபந்து போட்டிகள் வருகின்ற நவம்பர் 25 முதல் 29 தேதி வரை சென்னையில் நடைபெற உள்ள நிலையில் தற்போது வீரர் வீராங்கனை தேர்வு நடைபெற்று வருகிறது.

எறிபந்து போட்டி வீரர்கள் தேர்வு

இந்நிகழ்வில் மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனம் முதல்வர் டாக்டர், செல்வம், முதுநிலை விரிவுரையாளர் பீட்டர் ஆனந்த், கல்வியாளர்கள், சேலம் மாவட்ட எறிபந்து கழகம் செயலாளர் வைரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட இந்திய அணி!

ABOUT THE AUTHOR

...view details