தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

புரோ கபடி: சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவிய தெலுங்கு டைடன்ஸ் - புரோ கபடி லீக்

2019ஆம் ஆண்டுக்கான புரோ கபடி லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தெலுங்கு டைடன்ஸ் அணி யு மும்பா அணியிடம் தோல்வி அடைந்தது.

தெலுங்கு டைடன்ஸ் தோல்வி

By

Published : Jul 21, 2019, 7:39 AM IST

தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைடன்ஸ் உள்ளிட்ட 12 அணிகளுக்கு இடையேயான புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசன் நேற்று ஹைதராபாத்தில் தொடங்கியது.

முதல் போட்டியில், தெலுங்கு டைடன்ஸ் அணி, யு மும்பா அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், யு மும்பா அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சிங் 10 முறை ரைட்டுக்கு சென்று பத்து புள்ளிகளை பெற்று அசத்தினார். இறுதியில், தெலுங்கு டைடன்ஸ் அணி 25-31 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

புரோ கபடி லீக் போட்டி

இதேபோல், நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியுடன் மோதியது. இதில், இரு அணிகளும் ரைட், டாக்கில் இரண்டிலும் சரிக்கு சமமாக விளையாடி புள்ளிகளை போட்டிபோட்டுக் கொண்டு பெற்றனர்.

இறுதியில், பெங்களூரு அணி 34-32 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து, நடைபெறவுள்ள லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, தெலுங்கு டைடன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டி, இரவு 8.30 மணிக்கு கச்சிபவுலி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details