தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#PKL: ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது பிங்க் பேந்தர்ஸ்! - sandeep dhull

மும்பை: புரோ கபடி லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பிங்க் பேந்தர்ஸ் அணி 37-21 என்ற கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.

Pink Panthers beat Haryana Steelers

By

Published : Aug 1, 2019, 5:29 AM IST

புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசன், மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில், பிங்க் பேந்தர்ஸ் அணி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியுடன் மோதியது.

இதைத்தொடர்ந்து, ஆட்டம் தொடங்கியது முதலே பிங்க் பேந்தர்ஸ் அணி ரைட்டிங், டிஃபென்டிங் இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தியது. அதிலும் அந்த அணியின் தீபக் நிவாஸ் ஹூடா ரைடிங்கில் வெறித்தனதுடன் விளையாடினார்.

இதன் மூலம் பிங்க் பேந்தர்ஸ் அணி 37-21 எனற புள்ளி கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது. பிங்க் பேந்தர்ஸ் அணியின் தீபக் நிவாஸ் ஹூடா ரைடிங்கில் 14 புள்ளிகளும், சந்தீப் துல் டிஃபெண்டிங்கில் 6 புள்ளிகளும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

ABOUT THE AUTHOR

...view details