தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#NHL: கடைசி நிமிடத்தில் டிஃபெண்டர் செய்த தவறு: அவலாஞ்சி முதல் தோல்வி - ஐஸ் ஹாக்கி

கடைசி நிமிடத்தில் டிஃபெண்டர் செய்த தவறால் கொலராடோ அவலாஞ்சி அணி நேஷனல் ஹாக்கி லீக் தொடரில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

Penguins

By

Published : Oct 17, 2019, 11:49 PM IST

அமெரிக்காவில் ஐஸ் ஹாக்கி எனப்படும் நேஷனல் ஹாக்கி லீக் போட்டி மிகவும் பிரபலமானவை. இந்த சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில், பிட்ஸ்பர்க் பென்குவின்ஸ் - கொலராடோ அவலாஞ்சி அணிகள் மோதின.

அவலாஞ்சி - பிட்ஸ்பர்க்

இரு அணிகளும் தலா இரண்டு கோல்களை அடித்திருந்தனர். இந்த நிலையில், ஆட்டம் முடிகின்றன நேரத்தில் கூடுதலான நேரம் வழங்கப்பட்டது. அப்போது, களத்தில் சிறப்பாக ஆடிய பிட்ஸ்பர்க் வீரர் பிரன்டான் தனேவ் அடித்த ஷாட்டை, அவலாஞ்சி டிஃபெண்டர் சரியாக தடுக்காகதால் அது கோலாக மாறியது.

இதனால், பிட்ஸ்பர்க் அணி 3-2 என்ற கணக்கில் அவலாஞ்சி அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்த சீசனில் அவலாஞ்சி அணி தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details